Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வீட்டில் தீ, ஆடவர் கருகி மாண்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீட்டில் தீ, ஆடவர் கருகி மாண்டார்

கோலா காங்சார் , ஆகஸ்ட் 29-

கோலகங்சார்,ஜாலான் கம்போங் பாரு லிமான் கடி என்ற இடத்தில் ஒரு வீட்டில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்.

வீட்டில் நாலாபுறமும் தீயின் ஜுவாலை சூழ்ந்துக்கொண்ட நிலையில் தப்பிக்க இயலாமல் அந்த ஆடவர் தீயின் கோர நாக்கில் சிக்கியதாக கூறப்படுகிறது.

36 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் கருகிய உடல், வீட்டின் சமையல் அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தீச் சம்பவம் தொடர்பாக அதிகாலை 1.10 மணியளவில் கோலாகங்சார் தீயணைப்பு நிலையம் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆரயாப்படும் வேளையில் அந்த ஆடவரின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →