Sep 26, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்
தற்போதைய செய்திகள்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

Share:

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மாநில அரசுகளுடன் இணைந்து தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இன்று கோலாலம்பூர், பங்சாரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கடந்த மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வந்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான கிக் தொழிலாளர் சட்டம் மூலம் கிக் தொழிலாளர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

2026-ஆம் ஆண்டில் மட்டும் தொழிலாளர் நலன் சார்ந்த 8 சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 95.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வெளிநாட்டுத் தொழிலாளர் தேவையைக் குறைத்து, உள்ளூர் தொழிலாளர்களை மேம்படுத்த உதவும் என்று டத்தோஸ்ரீ ரமணன் விளக்கினார்.

நாளை மே 1 தேதி புக்கிட் ஜாலிலில் நடைபெறும் தேசிய தொழிலாளர் தின கொண்டாட்ட விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வெளியிடக்கூடிய அறிவிப்பு, நிச்சயம் தொழிலாளர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News