ஒரு முன்னாள் சொத்துடைமை மேம்பாட்டாளரான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜு சோமுவிடம் இரண்டு முக்கிய இலாகாக்கள் ஒப்படைக்கப்பட்டு இருப்பது ஒரு தவறான முன்னாதாரணமாகும் என்பதுடன் அதில் நலன் சார்ந்த முரண்பாடுகள் இருப்பதாக பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் விடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜுவிடம் வீடமைப்புத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் ஒப்படைக்கப்பட்டு இருப்பது , வழக்கத்திற்கு மாறானதாகும் என்று ஓர் அரசாங்க சார்பற்ற அமைப்பான அலிரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒரு வீடமைப்புத்திட்டம் மேற்கொள்ளப்படும் போது, அந்த வீடமைப்புத் திட்டம், சுற்றுச்சூழலுக்கு மிரட்டலாக உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவது சுற்றுச்சூழல் துறையின் முக்கியப் பொறுப்பாகும்.
சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கினால் மட்டுமே அந்த வீடமைப்புத்திட்டத்தை அங்கீகரிக்க முடியும்.நிலைமை இவ்வாறு இருக்க, வெவ்வேறு ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய வீடமைப்புத்துறையும், சுற்றுச்சூழல் துறையும், ஒரே நபரிடம் அதுவும் சொத்துடமை மேம்பாட்டு பின்னணியை கொண்ட நபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய அவசியம்தான் என்ன என்பது குறித்து பினாங்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அலிரான் கேட்டுக்கொண்டுள்ளது.
வீடமைப்புத்துறையில் உள்ளவரிடம் சுற்றுச்சூழல் துறையும் ஒப்டைக்கப்பட்டால் அந்த வீடமைப்புத்திட்டத்தில் சுற்றுச்சூழல் தொடர்புடைய பிரச்னைகள் எழும் பட்சத்தில் அதைப்பற்றி அவர் பொருட்படுத்துவார் என்று கருத முடியாது.
எனவேதான் இரு துறைகளிடம் வெவ்வேறு நபரிடம் ஒப்படைக்கப்படுவது ஒரு மரபாக கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், பினாங்கில் ஒரே நபரிடம் இரு முக்கிய துறைகள் ஒப்படைக்கப்பட்டதற்கான பின்னணிதான் என்ன என்பது குறித்து பினாங்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த அரசாங்க சார்பற்ற அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய செய்திகள்
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜுவிடம் இரண்டு முக்கிய இலாகாக்களை ஒப்படைப்பதா?
Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


