Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவர் கைது

கோலாலம்பூர், டிச.14-


மலேசியாவில் வேலை செய்வதற்கு ஆர்வமாக உள்ள வங்காளதேசப் பிரஜைகளை இந்நாட்டிற்கு கொண்டு வந்து அவர்களை சுரண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவரை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்தது.

ஒவ்வொரு வங்காளதேசியிடமும் சுமார் 20 ஆயிரம் வெள்ளியைப் பெற்றுக்கொண்டு, சுற்றுப்பயணிகள் போர்வையில் மலேசியாவிற்கு கொண்டு வந்த இந்த மூவரும் கைது செய்யப்பட்டது மூலம் வங்காளதேசிகளை இலக்காக கொண்டு, அவர்களை சுரண்டி வந்த கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸக்கரியா ஷாபான் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழம இரவு 11 மணியளவில் கோலாலம்பூர், செராஸ் பகுதியில் ஏகக்காலத்தில் குடிநுழைவுத்துறை நடத்திய திடீர் சோதனையில் பெண் உட்பட மூன்று நபர்கள் பிடிபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →