Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைக்கும்பலுடன் தொடர்பு , அரசியல்வாதி மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

கொள்ளைக்கும்பலுடன் தொடர்பு , அரசியல்வாதி மீது நடவடிக்கை

Share:

மலேசியாவில் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் சுமார் பத்து லட்சம் வெள்ளியை கொள்ளையடித்த மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒருமுன்னாள் அதிகாரி சம்பந்தப்பட்ட கொள்ளையில் ஓர் அரசியல்வாதியும், அவரின் மனைவியும் சம்பந்தப்பட்டுள்ளதாக கெப்போங் எம்.பி. லிம் லிப் இன்ஜி தெரிவித்தார்.

அந்த அரசியல்வாதி, தற்போது அரசியலில் தீவிரமாக இல்லை என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து இருக்கிறார் என்று லிம் லிப் இன்ஜி குறிப்பிட்டார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சீன தொழில் அதிபரின் வழக்கறிஞருடன் கோலாலம்பூரில் இன்று கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் லிம் இதனை குறிப்பிட்டார்.

அந்த அரசியல்வாதியும், அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.

எனினும் அந்த அரசியல்வாதியின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

Related News