Oct 6, 2026
Thisaigal NewsYouTube

தேர்வு பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேர்வு பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் படுகாயம்

கெடா, கூலிமில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழே விழுந்த 13 வயது மாணவன் படுகாயமடைந்தார். ஓய்வு நேரத்தில் மாலை 3.40 மணியளவில் பிளாக் E படிக்கட்டுக்கு அருகே மாணவன் கிடந்ததை ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்தார்.

கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Syamsul Sinring கூறுகையில், தகவல் கிடைத்ததும் மாணவன் கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலஸ் துறை விசாரணையில், படிப்பில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மூன்றாவது மாடியில் இருந்து வேண்டுமென்றே கீழே விழுந்ததாக மாணவன் தெரிவித்தார்.

அடுத்த வாரம் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது என்ற அச்சத்தில் இருந்ததாகவும், அதே பள்ளியில் நான்காம் படிவம் படிக்கும் தனது மூத்த சகோதரியுடன் தனது கல்வித் திறனை ஒப்பிட்டுக் கொண்டதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

சம்பவத்துக்கு ஒரு நாள் முன்னதாக படிப்பு மற்றும் குடும்பம் தொடர்பான மன அழுத்தத்தைப் பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பள்ளியின் பெயரைக் காப்பாற்ற மாணவர்களின் பாதுகாப்பை பலி கொடுக்கக்கூடாது! – அன்வார்

பள்ளியின் பெயரைக் காப்பாற்ற மாணவர்களின் பாதுகாப்பை பலி கொடுக்கக்கூடாது! – அன்வார்

மியன்மார் கைதிகள் நாடு திரும்பும் திட்டம்: கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைப்பு

மியன்மார் கைதிகள் நாடு திரும்பும் திட்டம்: கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைப்பு

இன நல்லிணக்கத்துக்கு தனிச்சட்டமா? பரிந்துரைகளை ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வையுங்கள்’ –  அஸாலினா ஒத்மான் கூறுகிறார்

இன நல்லிணக்கத்துக்கு தனிச்சட்டமா? பரிந்துரைகளை ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வையுங்கள்’ – அஸாலினா ஒத்மான் கூறுகிறார்

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்

யோங் பெங் பள்ளி மாணவி மரணம்; தலையில் பலத்த காயமே காரணம்

யோங் பெங் பள்ளி மாணவி மரணம்; தலையில் பலத்த காயமே காரணம்