பத்தாங் காலி - கெந்திங் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி அடுத்தாண்டு மே மாததிற்குள் நிறைவடைந்து விடும் என சிலாங்கூர் மாநில அடிப்படை வசதிகள் ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.
190 ஆயிரம் வெள்ளி செலவிலான இந்த சீரமைப்புத் திட்டம் தற்போது 38 விழுக்காடு நிறைவடைந்துள்ள எனவும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு கருதி இத்திட்டத்தை மிக கவனமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொது மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த ஒன்று அல்லது இரு மாதங்கள் அந்தச் சாலை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.








