லங்காவி, ஆகஸ்ட்.14-
இரண்டு வாரங்களுக்கு முன்பு, லங்காவி, பூலாவ் டாயாங் புந்திங், ஓஃப் பந்தாய் ஓக் கடற்பகுதியில் தனது முன்னாள் மனைவியைக் கொன்றதாக ஆடவர் ஒருவர் லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
26 வயது ஷாஃபிக் ஈயான் சாய்யான் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் நூருல் நராஷா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 30 ஆம் தேதி காலை மணி 11 க்கும் பிற்பகல் 3 க்கும் இடைப்பட்ட நேரத்தில் தனது 21 வயது முன்னாள் மனைவி ஃபாடில்லா சைடோன் என்வரைக் கொன்றதாக அந்த நபருக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இக்கொலை வழக்கு, அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.








