Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானில் உள்ள மூன்று மலேசிய யானைகளைப் பராமரிக்க 3 மாவோட்கள் அனுப்பப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் உள்ள மூன்று மலேசிய யானைகளைப் பராமரிக்க 3 மாவோட்கள் அனுப்பப்பட்டனர்

Share:

ஜப்பானின் ஒசாகா நகரிலுள்ள டென்னோஜி உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலேசிய யானைகள் தாரா, அமுய் மற்றும் கெலாட் ஆகியவற்றை பராமரிப்பதற்காக கோலா கன்டா தேசிய யானைகள் பாதுகாப்பு மையத்திலிருந்து மூன்று மாவோட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், ஓராங் அஸ்லி செ வோங் சமூகத்தைச் சேர்ந்த அலி கடோங், இந்த மூன்று யானைகளையும் முன்பே கையாண்ட அனுபவம் கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் சுஹைமி இப்ராஹிம் மற்றும் முகமது ஃபைசல் அஹ்மத் ஆகியோரும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி பணிகளைத் தொடங்கியதுடன், இரண்டு மாதங்கள் அங்கு தங்கவுள்ளனர்.

தேவைக்கேற்ப கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யானைகளை கையாளுதல், பழக்கப்படுத்துதல் மற்றும் அவற்றின் உடல்நலத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

ஜப்பானில் உள்ள மூன்று மலேசிய யானைகளைப் பராமரிக்க 3 மாவோட்... | Thisaigal News