சிலாங்கூரில் மலாய் ரிசாப் நிலத்தின் பரப்பளவு, 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2,680 ஏக்கர் அதிகரித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
சபா பெர்ணாமில் மலாய் ரிசாப் நிலம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தஞ்சோங் காராங்கில் 55.401 ஏக்கர் நிலம் சபாக் பெர்ணாம் மேம்பாட்டுப் பகுதிக்காக ரிசாப் நிலையிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார்.
அதேவேளையில், அதே அளவிலான 55.401 ஏக்கர் நிலம் உலு சிலாங்கூரில் மலாய் ரிசாப் நிலமாக அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், சிலாங்கூரில் மலாய் ரிசாப் நிலத்தின் மொத்தப் பரப்பளவு 4 லட்சத்து 711 ஏக்கரிலிருந்து 4 லட்சத்து 3,391 ஏக்கராக அதிகரித்துள்ளது என்றார்.








