Sep 6, 2026
Thisaigal NewsYouTube
மாநிலத் தேர்தல் வெற்றி மட்டும் போதாது – பாரிசான் தலைவர்களுக்கு சாஹிட் ஹமீடி எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மாநிலத் தேர்தல் வெற்றி மட்டும் போதாது – பாரிசான் தலைவர்களுக்கு சாஹிட் ஹமீடி எச்சரிக்கை

Share:

ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் வெற்றியை வைத்து பாரிசான் நேஷனல் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என அதன் தலைவர் அஹமட் சாஹிட் ஹமீடி எச்சரித்துள்ளார்.

மாநிலத் தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தலிலும் தொடரும் என உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாக்காளர்கள் இனி எந்தக் கட்சிக்கும் நிரந்தர ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்று கூறிய சாஹிட், வேட்பாளர்கள், அரசாங்கத்தின் செயல்பாடு, உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நிலை ஆகியவை வாக்காளர்களின் முடிவை தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், மலாய், சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் மீண்டும் பாரிசானுக்கு ஆதரவளிப்பதாக அவசரமாகக் கருதக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், பாரிசான் மீதான நம்பிக்கையை மக்கள் எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம் என்று குறிப்பிட்ட சாஹிட், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் வெற்றியின் வேகத்தை மட்டும் தக்கவைப்பதை விட, அதன் பின்னணியை பாரிசான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விவரித்துள்ளார்.

இதன் மூலம் அடுத்த பொதுத்தேர்தலில் கடந்த காலத் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க முடியும் என்றும் சாஹிட் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து