Aug 20, 2026
Thisaigal NewsYouTube
கோலா திரெங்காணுவில் பகுதி நேர வேலை மோசடி – இல்லத்தரசியிடம் 38, 505 ரிங்கிட் பறிப்பு
தற்போதைய செய்திகள்

கோலா திரெங்காணுவில் பகுதி நேர வேலை மோசடி – இல்லத்தரசியிடம் 38, 505 ரிங்கிட் பறிப்பு

Share:

கோலா திரெங்கானுவில் போலியான இணைய வழி பகுதி நேர வேலை வாய்ப்பை நம்பிய 36 வயது இல்லத்தரசி ஒருவர் 38 ஆயிரத்து 505 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

டிக்டாக் நிறுவனப் பிரதிநிதி என தன்னைக் கூறிக் கொண்ட நபர் ஒருவர், தொலைபேசி மூலம் அவரைத் தொடர்பு கொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அப்பெண்ணைத் தொடர்பு கொண்ட சந்தேக நபர், பொருட்களைப் பெற்றுப் பரிசீலனை செய்வதற்காக வாட்ஸ்அப் குழுவில் சேர முகவரியை உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளார்.

அதன்படி பொருட்களைப் பெற்று, அவற்றை மதிப்பாய்வு செய்த பெண்ணுக்கு 3 ரிங்கிட் கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிக கமிஷன் கிடைக்கும் புதிய பணிகளை சந்தேக நபர் வழங்கியுள்ளார்.

கூடுதல் வருமானம் ஈட்டும் நோக்கில் அந்தப் பெண் சமூக ஊடகங்களில் பொருட்களை மதிப்பாய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளைச் செய்துள்ளார்.

பின்னர், லாபத் தொகையைப் பெறுவதற்கான நிர்வாகச் செலவு எனக் கூறி குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு சந்தேக நபர் வலியுறுத்தியுள்ளார்.

இதனை நம்பி பணம் செலுத்திய நிலையில், மொத்தம் 38 ஆயிரத்து 505 ரிங்கிட்டை அவர் இழந்ததாக கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

Related News