மலாக்கா மாநிலம்,பெம்பான், கம்போங் ஆய்ர் பனாஸ், பகுதியில் கார் மீது மரம் விழுந்ததில் அதில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
24-வது கிலோமீட்டர் பகுதியில் இரவு 9.46 மணியளவில் நிழந்த இச்சம்பவத்தின் போது, காரில் இருந்த அனைவரும் காயமின்றி இருந்ததுடன், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு கிடைத்ததும் ஜாசின் பெஸ்தாரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்குச் செல்லும் சந்திப்பில் நுழைய முயன்ற போது மரம் கார் மீது விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஜாசின் பெஸ்தாரி மற்றும் ஜாசின் தீயணைப்பு நிலைய வீரர்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணி இரவு 11.01 மணியளவில் நிறைவடைந்தது.








