Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஷா ஆலமில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

ஷா ஆலமில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம்

Share:

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் ஷாஆலம் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஷா ஆலம், செக்‌ஷன் 13 இல் பெர்சியாரன் சுகான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

தவிர அகாபெல்லா கட்டடம், ஜலான் ஸுரௌ மினவ்வராஹ், கெலாப் கோல்ஃப் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா சமிக்ஞை விளக்குப்பகுதி, ஜலான் எம்.எஸ்.யு லாமா, பாங்சாபுரி பெர்டானா முதலிப்பகுதிகளில் வெள்ளம் கரைப்புரண்டோடியதாக அவர் குறிப்பிட்டார்.

பிற்பகல் 3.40 க்கும் 4.35 க்கும் இடைப்பட்ட நேரத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.எனினும் நிலைமை கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News