Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை: 7 பேர் கைது – 14 பேர் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை: 7 பேர் கைது – 14 பேர் மீட்கப்பட்டனர்

Share:

மலாக்காவில் மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நேற்று ஏழு பேரை போலீசாரால் கைது செய்துள்ளனர்.

மேலும், அங்கு கட்டாய வேலைக்குத் தள்ளப்பட்டதாக நம்பப்படும் 14 பேரையும் மீட்டுள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் மனிதக் கடத்தல் மற்றும் புலம் பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புப் பிரிவான ATIPSOM, நேற்று அதிகாலை 1 மணியளவில் தாமான் கிளேபாங் பெசார் மற்றும் ஜாலான் தெங்கேரா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தியது.

அப்போது, 19 முதல் 38 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்களில் சீனா, மியான்மாரைச் சேர்ந்த இரண்டு ஆண்களையும், மியன்மார், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண்களையும் கைது செய்துள்ளது.

அவர்கள் ATIPSOM சட்டம் 2007-இன் கீழ் கைது செய்யப்பட்டு, குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Related News