கோலாலம்பூர், செப்டம்பர்.30-
எதிர்காலத்தில், கிள்ளான் ஆற்றை நீச்சல் போட்டிகளுக்குத் தகுதி பெறும் வகையில், அதனைச் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே தனது கனவு என்று கோலாலம்பூர் மேயர் டத்தோ ஶ்ரீ மைமூனா முகமட் ஷாரிஃப் Datuk தெரிவித்துள்ளார்.
பாரீசின் செய்ன் நதி எப்படி சுத்தம் செய்யப்பட்டு, கடந்த 2024 -ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில், நீச்சல் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதோ, அதே போல், கிள்ளான் ஆற்றையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், செயின் நதியைச் சுத்தம் செய்ய, பாரீஸ் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேல் செலவு செய்துள்ளதைச் சுட்டிக் காட்டிய மைமூனா முகமட், கிள்ளான் ஆற்றையும் சுத்தம் செய்யக் கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவிக் காலத்திற்குள் இதனைச் செய்ய இயலாமல் போனாலும் கூட, தனக்குப் பிறகு மேயராகப் பதவி ஏற்பவர்கள் இதனைத் தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








