Oct 6, 2026
Thisaigal NewsYouTube

18 முதல் 29 வயதினரில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
18 முதல் 29 வயதினரில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவில்லை

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் மலேசியர்களில் நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அந்த பாதிப்பு இருப்பதை அறியவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற நிலை ஆய்வின் தரவுகளின்படி, இந்த வயதுப் பிரிவில் 192,464 பேருக்கு நீரிழிவும், 339,853 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் கண்டறியப்படாத நிலையில் உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய டாக்டர் ஸுல்கிஃப்லி, ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகள் இல்லாததால் இந்த நோய்கள் இளைஞர்களிடம் கவனிக்கப்படாமல் போவதாகக் கூறினார்.

இதனை எதிர்கொள்ள தேசிய சுகாதாரப் பரிசோதனை முயற்சியின் மூலம் 40 வயதுக்குட்பட்ட 26 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 3 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு உயர் ரத்தச் சர்க்கரை அளவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு