May 21, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்திய தம்பதியர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்திய தம்பதியர் கைது

Share:

கடந்த மாதம், இந்தோனேசியாவைச் சேர்ந்த 10 சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கடத்திய தம்பதியர் தெலுக் இந்தான் செஷன் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இருப்பினும், நீதிபதி இந்தான் நுருல் ஃபரினா சைனால் அபிடின் முன்னிலையில், 60 வயது கமாருல்சமான் அப்துல் வாஹாப்பிடம் இருந்தும் இந்தோனேசியரான அவரது 54 வயது மனைவினைடம் இருந்தும் எந்த சாட்சியத்தையும் பதிவு செய்யவில்லை
கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் நாள் காலை 5.30 மணி அளவில் ஹுத்தான் மெலிந்தாங் ஜாலான், பத்து12, ஜாலான் பாகான் டத்தோவில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவ்விருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வழக்கு எதிர்வரும் 2024, பிப்பரவரி 27 ஆம் தேதி மீண்டும் செவிமெடுப்புக்கு வருவதாக நீதிமன்றம் முடிவு செய்தது.

முன்னதாக, பாகன் டத்தோவில், Op Pintas Khas அதிரடிச் சோதனை நடத்தப்படும்போது, 10 அந்நிய நாட்டவரையும் அவர்களைக் கடத்தி வந்த அத்தம்பதியரையும் தடுத்து வைத்ததாக, பேரா மாநிலக் காவல் துறை தகவல் வெளியிட்டிருந்தது.

Related News