May 24, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து சிப்பந்திகளும் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

அனைத்து சிப்பந்திகளும் காப்பாற்றப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-

ஜோகூர், தஞ்சோங் பென்யுசோப் மைல்கல் கடற்பகுதியில் இரண்டு கடல் மைல் தொலைவில் பயணம் செய்த அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான கேடி பெண்டேகர் எனும் கப்பலில் துவாரம் ஏற்பட்டு, கப்பலில் நீர் புகுந்த சம்பவம் நேற்று நள்ளிரவு நிகழ்ந்துள்ளது.

இதனை அரச மலேசிய கடற்படை இன்று உறுதிப்படுத்தியது. எனினும் அந்த கடற்படை கப்பலில் பயணம் செய்த வீரர்கள் மற்றும் சிப்பந்திகள் என அனைவரும் காப்பாற்றப்பட்டனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்பகுதியில் காணப்படும் ஒரு பொருளில் கப்பல் மோதியதன் காரணமாக துவாரம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

Related News