May 24, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் சகோதரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் சகோதரர் உயிரிழந்தார்

Share:

குளுவாங்,ஆகஸ்ட் 19

ஜோகூர் பாரு - ஏர் ஹிதம் சாலையின் 76-வது கிலோமீட்டரில், ட்ரெலர் மற்றும் NISSAN ALMERA ரக வாகனத்தை உட்படுத்தி நிகழ்ந்த விபத்தில் 22 வயது லு வென் ஹுய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் 21 வயது லு வென் ஹுய் என்ற சகோதரி முகத்திலும் கைகால்களிலும் கடும் காயங்கள் ஏற்பட்டு க்ளுவாங் என்சே' பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மச்சாப்-இல் இருந்து சிம்பாங் ரெங்கம் நோக்கி ட்ரெலர்வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த NISSAN ALMERA ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த விபத்து நிகழ்ந்ததாக குளுவாங், மாவட்டப் போலிஸ் தலைவர்,அசிஸ்டன் கோமிசியோனர் பஹ்ரின் முகமது நோகூறியுள்ளார்.

இந்நிலையில், 32 வயதான ட்ரெலர் ஓட்டுநரைப் போலிஸ் கைது செய்துள்ளது.

Related News