Oct 2, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தில் பயணித்த போலீஸ்காரர் காருடன் கால்வாயில் விழுந்து மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தில் பயணித்த போலீஸ்காரர் காருடன் கால்வாயில் விழுந்து மரணம்

சிப்பாங், நவம்பர்.29-

சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடிய ஓடிய நிலையில் நீரின் மத்தியில் காரில் பயணித்த போலீஸ்காரர் ஒருவர், காருடன் கால்வாயில் விழுந்து மரணமுற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணியளவில் சிப்பாங்கில் Desa Giching கிளினிக் அருகில் நிகழ்ந்தது. கார் கால்வாயில் விழுந்த நிலையில் நீந்தி தப்பிக்க அந்த போலீஸ்காரர் முயற்சி செய்த வேளையில் அவர் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக இரவு 11.30 மணியளவில் அவசர அழைப்புப் பெறப்பட்டது. அவசர அழைப்பைத் தொடர்ந்து கேஎல்ஐஏ தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் வரை கடந்து சம்பவ இடத்தை நள்ளிரவு 12.02 மணிக்கு வந்தடைந்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

நீரில் மூழ்கிய அந்த போலீஸ்காரர் நீலாய் மாவட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார் என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்