போலீஸ் அதிகாரி ஒருவர் 4 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள ரொலெக்ஸ் கைக்கடிகாரங்கள் வைத்திருந்தது குறித்து அரச மலேசிய போலீஸ் படை விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 4 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இரு கைக்கடிகாரங்களை திருடிவிட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவின் மனைவி குற்றஞ்சுாட்டப்பட்டு இருந்தார். அந்த இரு கைக்கடிகாரங்களுமே தனது கணவரிடமிருந்து களவாடிவிட்டதாக அந்த பெண்ணுக்கு எதிராக குற்றச்சாட்டி தெரிவிக்கப்பட்டள்ளது.
ஸ்காய் ட்வெல்லார் ரகத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள கைக்கடிக்காரம் ஒன்றும், ஜிஎம்தி மாஸ்தர்-II 9 ரகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 98 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள ஒரு கைக்கடிகாரும் தருவிட்டதாக அந்த மாது மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
கேள்வி என்னவென்றால், சுமார் 4 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள கைக்கடிகாரங்களை வாங்கி அணியும் அளவிற்கு போலீஸ்காரர்களின் மாத வருமானம் இருக்கிறதா என்பதாகும். இது குறித்து போலீஸ் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று லிம் லிப் எங் கேட்டுக்கொண்டார்.








