Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பேரிக்காதான் நசியனால்-லுடன் ஒத்துழைக்க வேண்டுமானால், பேராசிரியர் ராமசாமி சர்ச்சைக்குரிய கூற்றுகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தற்போதைய செய்திகள்

பேரிக்காதான் நசியனால்-லுடன் ஒத்துழைக்க வேண்டுமானால், பேராசிரியர் ராமசாமி சர்ச்சைக்குரிய கூற்றுகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 05-

பேரிக்காதான் நசியனால் -லுடன் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால், உரிமைக் கட்சியின் இடைக்கால தலைவர் பேராசிரியர் P.ராமசாமி, சர்ச்சைக்குரிய கூற்றுகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

டிஏபி கட்சியில் இருந்த போது கொண்டிருந்த போக்கை, அவர் தற்போதும் தொடருவாரேயேனால், தங்கள் கூட்டணியுடன் ஒரு போதும் அவரால் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என பேரிக்காதான் நசியனால்-லின் இந்திய தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாஸ் கட்சி ஆதரவு பேரவை - DHPP-யின் தலைவர் N.பாலகிருஷ்ணன் கூறுகையில், டிஏபி-யில் இருந்த காலத்தில் பாஸ் கட்சியின் தலைவர்களை கடுமையாக சாடியிருந்த ராமசாமி, இதர இனங்களின் மனம் புண்படுகின்ற வகையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

தற்போதைக்கு, பேரிக்காதான் நசியனால்-லில் அனைத்து இனங்களையும் பிரதிநிதிக்கின்ற கட்சிகள் உள்ளன. புதிய கட்சியை இணைத்து கொள்வதால், கருத்து முரண்பாடுகள், தொகுதி பங்கீடுகளில் மோதல்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் எழலாம்.

உறுப்புக் கட்சியாக இணைவதைவிட, கூட்டணிக்கு வெளியிலிருந்து உரிமைக் கட்சிஆதரவளித்தால், அதன் அடைவுநிலையைப் பொறுத்து, அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை, பேரிக்காதான் நசியனால் கூட்டணி, அக்கட்சிக்கு வழங்கும் எனவும் பாலகிருஷ்ணன் கூறினார்.

பெர்சத்து கட்சியின் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கான பகுதியின் தகவல் பிரிவு தலைவர் ர ஸ்ரீ சஞ்சீவன் கூறுகையில், மக்களுக்காகவும் கொள்கைகாகவும் ராமசாமி சர்ச்சைக்குரிய கூற்றுகளை முன்வைப்பதில் தவறில்லை என்றாலும், அவர்களுக்கே அது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்துவிடக்கூடாது என்றார்.

இதற்கு முன்பு, பக்காத்தான் ஹாராப்பான்-ன்னை தவிர, பேரிக்காதான் நசியனால் உள்ளிட்ட கூட்டணிகளுடன் ஒத்துழைக்க, உரிமைக் கட்சி தயாராக உள்ளதாக, ராமசாமி கூறியிருந்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்