பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.25-
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழுக்கள், உடனடியாக மின் தடை ஏற்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு, சிக்கலைச் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முத்தியாரா டாமன்சாரா, அரா டாமன்சாரா, கோத்தா டாமன்சாரா மற்றும் பண்டார் உத்தாமா ஆகிய இடங்கள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று வலைத்தளத்தில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.








