Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முருகன்பெருமானின் பன்னீர் அபிஷேக விழா
தற்போதைய செய்திகள்

முருகன்பெருமானின் பன்னீர் அபிஷேக விழா

Share:

பத்துமலை திருத்தலத்தில் 140 அடி உயரத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் சிலையின் திருவடிக்கு
8 ஆம் ஆண்டாக பன்னீர் அபிஷேக நிகழ்வு, வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

சிறப்பு பூசைக்குப் பின்னர் பக்தர்கள் அனைவரும் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.

பக்த பெருமக்களும், அன்பர்களும், பொது மக்களும் திரளாக வருகை தந்து திருமுருகனின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, இறையருள் பெற்றுய்யுமாறு கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் சமயப் பகுதிப் பொறுப்பாளர் க. கதிரேசன் கேட்டுக்கொள்கிறார்.

Related News