Jul 1, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் பிந்தாங்கில் வெளிநாட்டுக் கொடி சர்ச்சை: மாநகர் மன்றம் விசாரணை
தற்போதைய செய்திகள்

புக்கிட் பிந்தாங்கில் வெளிநாட்டுக் கொடி சர்ச்சை: மாநகர் மன்றம் விசாரணை

Share:

வெளிநாட்டுக் கொடியின் நிறத்தில் சாயம் பூசப்பட்ட தூண் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, விசாரணை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் புக்கிட் பிந்தாங், ஜாலான் பெராங்கன் பகுதியில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

வைரலான காணொளியில், வங்கதேசக் கொடி போன்ற நிறங்கள் பூசப்பட்ட தூணுக்கு நபர் ஒருவர் மரியாதை செலுத்தியது மலேசியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மலேசியாவில் வெளிநாட்டுக் கொடிகளைப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

புகார்களைத் தொடர்ந்து DBKL அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தியபோது, அத்தகைய தூண் அங்கு காணப்படவில்லை. அது முன்கூட்டியே அகற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இக்குற்றத்திற்கு 6 மாத சிறை அல்லது 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை