கோலாலம்பூர், டிசம்பர்.10-
நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் நிலுவையில் வைத்திருக்கும் வாகனப் போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன் தொகையை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி விட வேண்டும். இதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன.
இக்காலக்கட்டத்திற்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் தங்களின் லைசென்சைப் புதுப்பிக்க முடியாத அளவிற்கு அவர்களின் பெயர்கள் கறுப்புப் பட்டில்களிலும் சேர்க்கப்படும் என்று சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 1.48 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ளள 4.95 மில்லியன் ஜேபிஜே சம்மன்கள் நிலுவையில் இருப்பதாக அது சுட்டிக் காட்டியுள்ளது.








