Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கேஎல்ஐஏ ஏரோடிரேன் நாளை முதல் செயல்படவிருக்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேஎல்ஐஏ ஏரோடிரேன் நாளை முதல் செயல்படவிருக்கிறது

கோலாலம்பூர், ஜூன்.30-

கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏரோடிரேன் ரயில் சேவை நாளை ஜுலை முதல் தேதி, காலை 10 மணி முதல் செயல்படவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

விமான நிலையத்திற்கும், விமான முனையத்திற்கும் பயணிகளைக் கொண்டு சேர்ப்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாக பேருந்து சேவை வழங்கப்பட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ள புதிய ஏரோடிரேன் சேவை, நாளை முதல் தொடங்கப்படுவதற்கான ஆவணத்தில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கேஎல்ஐஏவின் முதலாவது முனையத்தில் பயணிகள் தத்தம் விமானப் புறப்பாடு பகுதிக்கு செளகரியமான சூழலில் விரைந்து செல்ல ஏரோடிரேன் பெரும் பங்காற்றும். இச்சேவை மீண்டும் திரும்புவதற்குக் கடுமையாகப் பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியைப் பதிவு செய்வதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →