Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மோடுல் ஹிம்புனான் 40 ஹடிஸ் பாடத் திட்டம் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதில்லை *
தற்போதைய செய்திகள்

மோடுல் ஹிம்புனான் 40 ஹடிஸ் பாடத் திட்டம் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதில்லை *

Share:

பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோடுல் ஹிம்புனான் 40 ஹடிஸ் எனும் சமயப் பாட போதனையில் முஸ்லிம் அல்லாத மாணவர்களை ஒற்றுமை அரசாங்கம் கட்டாயப்படுத்தியது கிடையாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

இஸ்லாம் சமயம் குறித்து மிக ஆழமாக தெரிந்து கொள்வதற்கும், அதன் விளக்கங்களை ஆழ்மனதில் மனப்பாடமாக பதிவு செய்து கொள்வதற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமய பாடமாகவே அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பாடம் , முஸ்லிம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே. இந்தப் பாடத்திட்டத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டது கிடையாது என்று பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News