சிறப்பு வாகன பதிவு எண் பட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதியை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர்தந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து நிதியமைசசிடம் இருந்து அனுமதி கிடைத்திருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சிறப்புப் பதிவு எண் பட்டையை விற்பதன் மூலம் அதில் கிடைக்கும் வருமானத்தில் பாதியை மக்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்க்ய் போக்குவரத்து அமைச்சிடம் திருப்பித் தரப்படும் என்று நிதி அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.








