தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மலேசியர்களில் இன்னும் சிலர், நல்ல தரமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அனுபவத்திராத நிலையில், வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மாபெரும் நில அடையாளங்களால் மலேசியா பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஆடம்பர கட்டிடங்களாலும், பிரமாண்டமான கோபுரங்களினாலும் மலேசியாவும் மலேசியர்களும் பெருமைப்படுவதை விட பள்ளிகளின் கழிப்பறைகள் நல்ல வசதிகளுடன் இருக்க வேண்டும். அதுவே மலேசியர்களின் பெருமையாகவும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவரையும் பாதுகாக்கின்ற அரணாக ஒற்றுமை அரசாங்கம் விளங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 66 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இன்று புத்ரா ஜெயாவில் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதபர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த ஆண்டு நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோ ஶ்ரீ அன்வார் பொறுப்பேற்றப் பின்னர் அவரின் தலைமையில் நாளை வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்படவிருக்கிறது.

தற்போதைய செய்திகள்
ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கும் தேசியத் தின செய்தியில் பிரதமர் அன்வார் உத்தரவாதம்
Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


