Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணைக் கத்தியால் குத்திய மாணவன்: 7 நாட்கள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

பெண்ணைக் கத்தியால் குத்திய மாணவன்: 7 நாட்கள் தடுப்புக் காவல்

Share:

சிப்பாங், ஏப்ரல்.11-

சிப்பாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 34 வயதுப் பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக 22 வயதுடைய தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், பிடிபட்ட மாணவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவன் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பதும், அவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ள நிலையில், அவருக்கு ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 7 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Related News