Dec 3, 2025
Thisaigal NewsYouTube
520 கோடி வெள்ளி மின்சாரக் கட்டண உதவித் தொகை வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்
தற்போதைய செய்திகள்

520 கோடி வெள்ளி மின்சாரக் கட்டண உதவித் தொகை வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்

Share:

சமீபத்தில் அரசாங்கம் அறிவித்த 520 கோடி வெள்ளி மதிப்புள்ள மின்சாரக் கட்டண உதவித் தொகையானது, பெரும்பாலான உள்நாட்டினர் அல்லது உள்நாட்டினர் அல்லத பயனர்களுக்கு அதிக விலையுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஈடுகட்ட பெரிதும் உதவும் என்று MEF எனப்படும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான உதவித் தொகைகள் வழங்காவிட்டால், உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், சிறு பட்டறைகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலார்களுக்கு பெரும் சுமையாக அமையும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் சேட் ஹுசேன் சேட் ஹுஸ்மான் குறிப்பிட்டார்.
இவ்வாறான உதவிகளை வழங்குவதன் மூலம் சாதகமான வணிகச் சூழலை உருவாக்குவது மட்டுமின்றி, புதிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தர முடியும் என்று இன்ரு வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் சேட் ஹுசேன் இதனை தெரிவித்தார்.

Related News