6 மாதச் சிசு ஒன்று 52 வயது குழந்தை பராமரிப்பாளர் ஒருவரால் சித்ரவதைக்கு உட்பட்டு ராஜா பெர்மைசூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்து விட்டது என இப்போ வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் யஹாயா ஹசான் தெரிவித்தார்.கடந்த ஜூலை 12ஆம் நாள் அந்த 6 மாத சிசு சித்ரவதைக்கு உட்பட்டதால், கோமாவில இருந்தது எனவும் அச்சிசுவின் உடல் முழுக்க வீக்கங்களும் காயங்களும் இருந்ததுடன் அந்த சிசு கூர்மையான ஆயுதத்தால் தலையில் அடிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 6 மாதக் குழந்தையின் இறப்பிற்கு காரணமான அந்த குழந்தை பராமாரிப்பாளரை போலீசார் விசாரணைகாக 4 நாட்கள் தடுத்து வைத்துள்ளனர் என யஹாயா மேலும் கூறினார்.

தற்போதைய செய்திகள்
ஆயா ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு மாத குழந்தை உயிரிழந்துள்ளது
Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


