Sep 25, 2026
Thisaigal NewsYouTube
போலி ராணுவ சீருடை, கையில் துப்பாக்கி: வைரல் வீடியோ நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

போலி ராணுவ சீருடை, கையில் துப்பாக்கி: வைரல் வீடியோ நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

சிலாங்கூர், கெப்போங், தாமான் புக்கிட் டேசா பகுதியில் ராணுவ சீருடை அணிந்த நபர் ஒருவர், போலி துப்பாக்கி என சந்தேகிக்கப்படும் ஆயுதத்துடன் உலா வந்த 15 விநாடி வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசின் விடுத்துள்ள அறிக்கையில், குற்றவியல் சட்டம், ஆயுதச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், விசாரணை அதிகாரி பிரகாஷை 012-2940827 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொதுமக்களை இப்ராஹிம் ஹுசின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News