சுபாங் ஜெயா, அக்டோபர்.18-
கடந்த ஏப்ரல் முதல் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ், தாமான் புத்ரா ஹார்மோனியில் நிகழ்ந்த நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புத் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர், அந்த எரிவாயு குழாய்க்குச் சொந்தக்காரரான பெட்ரேனாஸ் நிறுவனம் உட்பட ஐந்து தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
Petronas Gas Berhad, Hong & Hong Homes Sdn. Berhad, சுபாங் ஜெயா மாநகர மன்றம் உட்பட ஐந்து தரப்பினருக்கு எதிராக தாங்கள் வழக்கு நடவடிக்கையைப் பதிவுச் செய்துள்ளதாக வாதிகள் தரப்பில் ஆஜராகியுள்ள லோ போ ஹெங் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் தாங்கள் பட்ட அவதியை நீதின்றம் அறிய வேண்டும் என்பதற்காகவே ஐந்து தரப்பினருக்கு எதிராக தாங்கள் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தங்கள் சார்பில் முன்னணி வழக்கறிஞராக முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ தோமி தோமஸை நியமித்து இருப்பதாக அவர் கூறினார்.