கெமாமான், டிசம்பர்.26-
வாகனத்தினால் மோதப்பட்ட தாப்பீர் ஒன்று உயிரிழந்தது. இவ்விபத்து, இன்று திரெங்கானு, கிஜால் அருகில் ஜாலான் கோலத் திரெங்கானு - குவாந்தான் சாலையில் நிகழ்ந்தது.
250 கிலோ எடை கொண்ட அந்த ஆண் தாப்பீர், காலை 11.40 மணியளவில் சாலையோரத்தில் இறந்து கிடந்தது குறித்து வழிபோக்கர் ஒருவர் தகவல் அளித்ததாக திரெங்கானு, வனவிலங்கு, தேசியப் பூங்கா இயக்குநர் லூ கியான் செயோங் தெரிவித்தார்.
அந்த விலங்கினத்தைச் சோதனை செய்ததில் அதன் வாய், கால் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருப்பது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.








