Oct 17, 2026
Thisaigal NewsYouTube

76 கள்ளக் குடியேறிகளைக் கைது செய்துள்ளது பேரா குடியுரிமைத் துறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
76 கள்ளக் குடியேறிகளைக் கைது செய்துள்ளது பேரா குடியுரிமைத் துறை

நவம்பர்- 10

மியான்மர், தாய்லாந்து இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 76 கள்ளக் குடியேறிகளைக் கைது செய்துள்ளது பேரா குடியுரிமைத் துறை

பேராவின் Pantai Remis, Manjung ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை நடைபெற்ற இரு வேறு சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக பேரா மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் Meor Hezbullah Meor Abd Malik தெரிவித்தார்.

பிடிபட்டவர்களில் 50 ஆண்கள், 22 பெண்கள், 4 சிறுவர்களோடு ஒரு பச்சிளம் குழந்தையும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார். இவர்கள் குடியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக 1959 1963 குடியுரிமைச் சட்டம் 6(1)(c) மற்றும் 15(1)(c) பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

இவர்கள் மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைநததாகவும், அனுமதி காலம் முடிவடைந்த பிறகும் அதிக காலம் இங்கேயே தங்கியதாகவும் Meor Hezbullah கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →