கோலாலம்பூர், டிசம்பர்.20-
மியான்மாரில் வேலை மோசடிக் கும்பலிடம் சிக்கியிருந்த 13 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து கொண்டு வரப்பட்டதாக விஸ்மா புத்ரா அறிவித்தது.
மீட்கப்பட்ட 13 மலேசியர்களும் இன்று அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
மியான்மாரில் உள்ள மலேசியத் தூதரகத்தின் தீவிர முயற்சியாலும், மியான்மார் அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும் 13 மலேசியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








