Jun 29, 2026
Thisaigal NewsYouTube
வீட்டிற்குள் புகுந்து கொள்ளை - காரைத் திருடிச் சென்ற இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை - காரைத் திருடிச் சென்ற இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

ஷா ஆலாம், மார்ச்.06-

ஷா ஆலம், செக்‌ஷன் 13 பகுதியில் இளைஞர் ஒருவரைப் பயமுறுத்தி, அவரது காரிலேயே கடத்திச் சென்று கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்களைக் போலீஸ் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இது குறித்து ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்சேய் எம்போல் வெளியிட்ட அறிக்கையில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்த போது, அடையாளம் தெரியாத இருவர் வீட்டிற்குள் நுழைந்தாகக் குறிப்பிட்டார்.

இருவரில் ஒருவரிடம் 'பாராங்' கத்தி இருந்தது. சந்தேக நபர்கள் அந்த இளைஞரின் பணப்பை, மடிக்கணினி , கைபேசி மற்றும் வீடு, கார் சாவிகளைப் பறித்துச் சென்றனர்.

கொள்ளையடித்ததோடு நில்லாமல், பாதிக்கப்பட்ட இளைஞரை அவரது சொந்த காரிலேயே அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச் சென்று, கூடுதல் பணம் எடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் போது அங்கு பொதுமக்கள் இருப்பதைக் கண்ட இளைஞர் உதவி கோரி கூச்சலிட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் அந்த இளைஞரின் காரிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு