Sep 27, 2026
Thisaigal NewsYouTube
  மெக்ஸ் நெடுஞ்சாலையில் 4 கார்கள் மோதி விபத்து: பிரபல பாடகி சித்தி நுர்ஹாலிசா சொற்ப காயங்களுடன் தப்பினார்
தற்போதைய செய்திகள்

மெக்ஸ் நெடுஞ்சாலையில் 4 கார்கள் மோதி விபத்து: பிரபல பாடகி சித்தி நுர்ஹாலிசா சொற்ப காயங்களுடன் தப்பினார்

Share:

நாட்டின் முன்னணி பாடகி டத்தோ ஸ்ரீ சித்தி நூர்ஹாலிசா, இன்று மாலை மெக்ஸ் விரைவு சாலையில் நெடுஞ்சாலையானயில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ கெம்பாங்கான் அருகே மெக்ஸ் நெடுஞ்சாலையின் 14.2 கிலோ மீட்டரில் இந்த மோதல் நிகழ்ந்தது. சிப்பாங்கில் உள்ள ஏர்ஏசியாவின் ரெட் க்யூ தலைமையகத்தில் ஒரு கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தனது குழுவினருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது நான்கு கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதில் சித்தி நுர்ஹாலிசா பயணம் செய்த வாகனமும் விபத்துக்குள்ளானது.

விபத்தைத் தொடர்ந்து சித் தி நுர்ஹாலிசா உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு காலில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது மேலாளர் ரோஸி அப்துல் ரசாக் உறுதிப்படுத்தியுள்ளார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்