Sabah, CKS பல்பொருள் பேரங்காடிக்கு அருகிலுள்ள Jambatan Batangan என்ற இடத்தில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 6.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் Perodua Viva ரக காரில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக Tuaran மாவட்ட தீயணைப்பு, மீட்புப் படையின் தலைவர் Mohamad Nor Amit கூறினார்.
சம்பவ இடத்தில் காரில் சிக்கி சுயநினைவின்றி காணப்பட்ட அவ்வாடவரின் உடலை தீயணைப்பு, மீட்பு அதிகாரிகள் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி வெளியேற்றியதாக Mohamad Nor அறிவித்தார்.
மேலும், Toyota Hilux ரக காரை ஓட்டி வந்த 48 வயது நபர் ஒருவர் உடலில் எந்தவொரு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக Mohamad Nor குறிப்பிட்டார்.








