Oct 2, 2026
Thisaigal NewsYouTube

திடீர் பள்ளம்: மலாக்காவில் சாலை சரிவு! அச்சத்தில் மக்கள்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திடீர் பள்ளம்: மலாக்காவில் சாலை சரிவு! அச்சத்தில் மக்கள்!

மலாக்கா, நவம்பர்.30-

நேற்று இரவு மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் உள்ள ஃபெடரல் ஹைய்வே நெடுஞ்சாலை FT033-இல் 10 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய பள்ளம் திடீரென ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த விபத்துக்குக் காரணம், சாலையின் 10 முதல் 11 மீட்டர் ஆழத்தில் இருந்த 1.8 மீட்டர் பரப்பளவிலான நிலத்தடி வடிகால் கட்டமைப்பின் தோல்விதான் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு, ஒரு வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதே போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க, இந்தப் பாதையில் உள்ள அனைத்து வடிகால் கட்டமைப்புகளையும் முழுமையாக ஆய்வு செய்ய அலெக்ஸண்டர் நந்தா லிங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை