கடந்த வியாழக்கிழமை எல்மினாவில் விழுந்து நொறுங்கிய பீச்க்ராஃப்ட் மோடல் 390 ப்ரீமியர் 1 ரக விமான விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விசாரணைக்குழுவினர் மலேசியா வந்தடைந்தனர். வான் போக்குவரத்துத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்கா கூட்டரசு விமான நிர்வாகப்பிரிவான ஃபா மற்றும் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமான எந்திஎஸ்பி ஆகிய இரு ஏஜென்சிகள், மலேசிய விமான விபத்து புலனாய்வுக்குழுவிற்கு உதவ இன்று காலையில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
விமானத்தில் இருந்த எண்மரும், தரையில் இருந்த இருவரும் கொல்லப்பட்ட 10 பேரை காவுக் கொண்ட அந்த இலகு ரக விமான பேரிடரின் விபத்துத்தன்மையை ஆராய்வதற்கும்,மதிப்பீடு செய்வதற்கும் இன்று காலையில் அமெரிக்கக் குழுவினர் ட்ரோன் உபகரணத்தைப் பயன்படுத்தினர்.








