Feb 15, 2026
Thisaigal NewsYouTube
பாகான் டத்தோவில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பாகான் டத்தோவில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

Share:

பாகான் டத்தோ, பிப்ரவரி.15-

பாகான் டத்தோ ஜாலான் ஊத்தாங் மெலிந்தாங்-பாகான் டத்தோவின் 25 வது கிலோமீட்டர் அருகே நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில், எதிரே வந்த லாரி, கார் மீது மோதியதில் சிறுவர்கள் இருவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது Muhammad Adam Rifqi Mohd Fairuz, 6 வயது Nur Aadimiyya Rifqina இவர்களின் உறவினர் 26 வயது Muhammad Nashrul Zainal Anuar ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கியா வகை காரில் பயணம் செய்த மேலும் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், பொதுமக்களைச் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி கவனமுடன் வாகனங்களை ஓட்டுமாறு பாகான் டத்தோ மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முஹமட் அலி முஹமட் ஜாலி அறிவுறுத்தினார்.

Related News