ஆயர் குரோ, டிசம்பர்.09-
மாது ஒருவரை மானபங்கம் புரிந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் கைதி ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
46 வயது Jefri Joris என்ற அந்த நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் சாரம்சத்தை செவிமடுத்த மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கானி, அவரை உடனடியாகச் சிறைக்குக் கொண்டுச் செல்லும் வகையில் தண்டனை விதித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி காலை 11.50 மணியளவில் மலாக்கா தெங்காவில் அந்த நபர், 31 வயது மாதுவிடம் பலவந்தமாக நடந்து கொண்டதுடன் அவரை மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் சம்பந்தப்பட்ட மாது உதவி நாடிய போது, அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.








