Glow in the dark எனும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சாலையில் போடப்படும் கோடுகளால் செமெஞ்சேவில் ஒளி வெள்ளத்தால் பிரகாசித்துள்ளது. இதனை பொதுப் பணி அமைச்சர் அலெக்சாண்டர் நான்டா லிங்கி நேரில் சோதனையிட்டார்
மேலும், சாலை பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதோடு, தொழில்நுட்பத்தையும் புதுமைகளையும் பின்பற்றப்படவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்திருக்கும் சாலைகளுக்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இருட்டில் தொடற்ண்௹ஊ 10 10 மணி நேரம் நீடிக்கும். மழைக்காலத்திலும் நல்ல பிரகாசத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது என அலெக்சண்டர் கூறினார்.
இந்தத் திட்டம் உலு லங்காட் மாவட்ட மன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் சுங்கை லாலாங் சாலை, சுங்கை தெகாலி சாலை ஆகிய இரு சாலைகளில் தொடங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தின் பயன் திறனை அமைச்சு முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும், இது மிகவும் விலையுயர்ந்தத் திட்டம் எனவும் அவர் கூறினார்.








