மானுட வாழ்விற்கு நபிகள் நாயகத்தின் அருங்குணமும், அவரின் நடத்தையும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த எடுத்துக்கட்டுகளாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நபிகள் நாயகம் எவருக்கு எதிராக அவதூறு அல்லது அவதூறு விளைவிக்கும் தன்மையிலான விமர்சனங்களில் ஈடுபட்டதில்லை.மாறாக, அவரின் உன்னதப் பணி, அறியாமையை அகற்றி, பல்வேறு சமூகத்தில் நீதி மற்றும் கருணையை நோக்கி வழி நடத்தியவர்.
உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சகோதரத்துவத்தை விதைத்தவர் அண்ணல் நபிகளாகும். அவர்களின் போதனையை பின்பற்றி, ஓர்அமைதிமிக்க, வளமான தேசத்தை கட்டியெழுப்புவதில் அனைவரும் கூட்டாக இணைந்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இன்று பெருமானார் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மௌலிடுர் ராசுல் லையொட்டி வழங்கி வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.








