கோல பிலா, டிசம்பர்.12-
காட்டில் பெத்தாய் காய்களைப் பறிக்கச் சென்ற நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று கம்போங் மாசோப், செனாலிங், கோல பிலாவில் நிகழ்ந்தது.
இதில் 47 வயதுடைய நபர் கடும் காயத்திற்கு ஆளானார் என்று கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார். சுடப்பட்ட நபர், பின்னர் உதவிக் கோரி தனது குடும்ப உறுப்பினர்களைக் கைப்பேசி வழி தொடர்பு கொண்டுள்ளார்.
விலா எலும்பிலும், முதுகிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அவர் தற்போது துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார்.








