Oct 4, 2026
Thisaigal NewsYouTube

பத்து காவான் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய வாகனங்களில் கோளாறு? - அமைச்சு விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பத்து காவான் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய வாகனங்களில் கோளாறு? - அமைச்சு விசாரணை

பினாங்கு, பத்து காவான் பகுதியில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய பின்னர் வாகனங்களில் கோளாறு ஏற்பட்டதாக வெளியான புகார்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக தங்களது பினாங்கு மாநில அலுவலக அதிகாரிகள் குழுவை, சம்பவ இடங்களுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், விசாரணை முடிந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பினாங்கிலுள்ள பல பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய பிறகு வாகனங்களை இயக்க முடியாத நிலை, உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாகக் கூறும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்தப் புகார்களின் உண்மைத்தன்மை குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →